Saturday, October 2, 2010

தேடல் ..

இணையதளத்திலும் ,

புதிதாக வாங்கப்பட்ட அலைபேசியிலும் ,

மாநகரின் நவநாகரீக வீதிகளிலும் ,

தேடிகொண்டிருக்கிறேன் தினமும்

தொலைந்து போன என்னை !

Friday, September 25, 2009

அம்மா ஞியாபகம்

அரைகுறையாய் துடைக்கப்பட்ட பெஞ்சுகளில்

பாலிதீன் தட்டுகளில் பரிமாறப்பட்ட

ஒவ்வொரு வேலை உப்பில்லாத சாப்பாடும் ....

தவறாமல் நியாபகப் படுத்தியது

அம்மாவை ..

Sunday, April 26, 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே..

தமிழகத்தில் உள்ள அனைவரையும் ஆறாம் அறிவு உள்ளதா என்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் (என்னை உட்பட ).

இரு கட்சிகள் நம்மை எல்லாம் கிட்டத்தட்ட ஒரு ஓட்டுபோடும் இயந்த்திரங்களைப் போல நடத்திஉள்ளன . நாமும் எதைப் பற்றியும் கவலைப் படாமல் ஆடு மாடுகளைப்போல் இருந்திருக்கிறோம்.

எடுத்துக்காட்டாக இந்த தேர்தல் நேரத்தில் இலங்கை தமிழர்களைப் பற்றிய கவலை அரசியல்வாதிகளுக்கு அதிகம் ஆகிவிட்டது.வழக்கம் போல தமிழனும் உணர்ச்சி வசப்பட ஆரம்பித்துவிட்டான் .

ஜெயலலிதா வின் "தனி ஈழ " நாடகமும் , கருணாநிதியின் " உண்ணாவிரத" நாடகமும் அரசியல் மேடைகளில் அரங்கேறியுள்ளன.இலங்கையில் கண்முன்னே நடக்கும் அந்த அரசாங்கத்தின் அட்டுழியங்களை கண்டும் ஒன்றும் செய்ய முடியாத பொம்மைகளாக இருக்கிறார்கள் .. இருக்கிறோம் !

ஜெயலலிதாவை விட ஆட்சியில் இருக்கும் கருணாநிதிக்கே பொறுப்பு அதிகம். ஒகேனக்கல் முதல் ராஜினாமா கடித நாடகம் வரை தமிழனுக்கு மிகப் பெரிய துரோகம் செய்தவராகிவிட்டார் .

இனிமேலும் இந்த இரு கட்சிகளுக்கும் மாறி மாறி வோட்டு போட்டுக் கொண்டிருந்தால் நம்மை விட ஒரு முட்டாள் இருக்கவே முடியாது.

பாரதி சொன்னதுதான் நியாபகத்துக்கு வருகிறது,

" நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால் "

Friday, February 6, 2009

அத்தியாவசியம்

உயிர் வாழ தேவை

நிலம் நீர் மற்றும் காற்று

ஆனால் எனக்கு மட்டும்

நிலம் நீர் காற்று மற்றும் நீ ......

Monday, December 29, 2008

Its all Recession !

சும்மா வெட்டியா surf பன்னிக்கிடிருந்தப்போ இந்த words 'ச படிச்சேன் ...


"Analysts say that "The financial situation at the moment is so bad
that women are now marrying for love""

Sunday, December 21, 2008

நீங்க ஹீரோவா ஆகனும்னா .........

  • வீட்லயோ இல்ல வேற எங்கயுமோ நீங்க நுழையும் போது
         கடைசியா வீட்டுக்குள்ள போங்க ..... அதேமாதிரி உங்கள யாராவது பாத்தா

        கால்ல இருந்து தல வரைக்கும் reverse ' பாக்க சொல்லுங்க ..........
  • நீங்க எழையாவோ இல்ல நடுத்தர குடும்பத்துல இருந்தோ வந்துருந்தீங்கன்னா
        "நட்சத்திர ஜன்னலில் .........

         வெற்றிக்கொடி கட்டு ........."

         மாதிரி பாட்ட திரும்ப திரும்ப போட்டு feel பண்ணி கேளுங்க .............

  • தெலுங்கு ஹீரோவாக நினச்சீங்கண்ணா மஞ்ச கலர் சட்டை ..... சிவப்பு கலர் பேன்ட்
         பச்ச கலர் ஷூ ... ஒரு ரெண்டு மூணு செட் ரெடியா வச்சுருங்க ......

  • வசனம் பேசுறது ஹீரோவுக்கு ரொம்ப முக்கியம் அதுனால
         யாராவது சிக்குனா பத்து நிமிஷமாவுது ஒரு மொக்கைய போடுங்க .....

Thursday, December 18, 2008

கை ருசி

சுவையாகத்தான் உள்ளது

குளிர் சாதன அறையில்

சுட சுட சாப்பிட்ட Pizaa 'வை விட

அத்தை மகள் கையால் பரிமாறப்பட்ட

பச்சை மிளகாயும் பழைய சோறும் . . .