Monday, May 27, 2024

நெருக்கம்

கொஞ்சம் பிடி தளர்த்து 

காற்று பாவம் பிழைத்து போகட்டும் 

நம்

இருவருக்கிடையில் ......!

Wednesday, March 13, 2024

நினை (இ) மற

 

ஊற்றும் தண்ணீரில் ஆக்சிஜன் எடுத்து  

பற்றி எரிகிறது தீ 


குடையின் தடையை  ஊடுருவி 

கொட்டி நனைந்தது மழை 


அசந்து தூங்கிய மரத்தில் கிளையை 

தொட்டு எழுப்பிய காற்று 


எனக்குள் என்னுடன் நடக்கும் யுத்தத்தில் 

முரனின் மொத்தமாய் நான் 

Wednesday, February 16, 2011

பசலை மருந்து

உன் கன்னம் உரசும்
காற்றை நினைவில் கொள்
அது என்
முத்தமாகவும் இருக்கலாம் ..

Sunday, January 2, 2011

கருணாநிதி ஏழையின் நண்பனா ? எதிரியா ?

"ஏழைகள் நடமாடும் வரை இலவச திட்டங்கள் இருக்கும்"


"இலவசங்களை கொடுத்து ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருப்போம் "

முதலாவது கருணாநிதி இன்று அறிக்கையில் சொன்னது .. இரண்டாவது அதற்கு அர்த்தம்.

தேர்தல் நேரங்களில் இந்த மாதிரி ஆளும் கட்சி அறிக்கை விடுவது வாஸ்தவம்தான் என்றாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். இலவசங்கள் கொடுப்பது எங்களை சோம்பேறி ஆக்கும் வேலை என்று உங்கள்ளுக்கு தெரியாதா ? அல்லது எங்களை சோம்பேறி அல்லது பிச்சை காரர்கள் ஆக்குவதுதான் உங்கள் நோக்கமா ?

நாங்கள் படிக்க முடியாமல் இருக்கிறோம் ! அரசின் திட்டங்கள் எங்களை சேரவில்லை ! அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ எங்கள் தெருப்பக்கமே வருவேதில்லை ! அதற்கு ஒரு வழி செய்யுங்கள்


நீங்கள் தேர்தல் அறிக்கை விடுவதற்கு இதோ ஒரு சில ஐடியாக்கள்:

  1. பொருளாதார நிலைமையில் பின்தங்கியுள்ள குடும்பங்களில் இருந்து ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு பெற உதவி செய்யப்படும் ( உதவி மட்டும் )
  2. பொருளாதார நிலைமையில் நன்றாக உள்ள SC/ST பிரிவினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க படாது
  3. அரசு பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிககுக்கு நிகராக உயர்த்தப்படும்.
  4. அரசியல்வாதிகள் மற்றும் அரசு அலுவலர்களின் குழந்தைகள் ( உங்கள் கொள்ளு பேரன்கள் உட்பட ! ) அரசு பள்ளிகளில் படிக்க உரியவை செய்யப்படும்.
  5. ஆளும் கட்சியினர் சாலை வழிகளை மறைத்து கட்அவுட் வைப்பது தடை செய்யப்படும்.
அரசு பணத்தில் இலவசங்களை வாரி வழங்குவதை விட்டுவிட்டு எங்கள் ஏழை இளைஞர்களுக்கு வேலை கொடுங்கள் ! நீங்கள் இலவசமாக கொடுப்பெதெல்லாம் சம்பாதித்து நாங்களே கௌரவமாக வாங்கிக்கொள்கிறோம்.

Saturday, October 2, 2010

தேடல் ..

இணையதளத்திலும் ,

புதிதாக வாங்கப்பட்ட அலைபேசியிலும் ,

மாநகரின் நவநாகரீக வீதிகளிலும் ,

தேடிகொண்டிருக்கிறேன் தினமும்

தொலைந்து போன என்னை !

Friday, September 25, 2009

அம்மா ஞியாபகம்

அரைகுறையாய் துடைக்கப்பட்ட பெஞ்சுகளில்

பாலிதீன் தட்டுகளில் பரிமாறப்பட்ட

ஒவ்வொரு வேலை உப்பில்லாத சாப்பாடும் ....

தவறாமல் நியாபகப் படுத்தியது

அம்மாவை ..

Sunday, April 26, 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே..

தமிழகத்தில் உள்ள அனைவரையும் ஆறாம் அறிவு உள்ளதா என்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் (என்னை உட்பட ).

இரு கட்சிகள் நம்மை எல்லாம் கிட்டத்தட்ட ஒரு ஓட்டுபோடும் இயந்த்திரங்களைப் போல நடத்திஉள்ளன . நாமும் எதைப் பற்றியும் கவலைப் படாமல் ஆடு மாடுகளைப்போல் இருந்திருக்கிறோம்.

எடுத்துக்காட்டாக இந்த தேர்தல் நேரத்தில் இலங்கை தமிழர்களைப் பற்றிய கவலை அரசியல்வாதிகளுக்கு அதிகம் ஆகிவிட்டது.வழக்கம் போல தமிழனும் உணர்ச்சி வசப்பட ஆரம்பித்துவிட்டான் .

ஜெயலலிதா வின் "தனி ஈழ " நாடகமும் , கருணாநிதியின் " உண்ணாவிரத" நாடகமும் அரசியல் மேடைகளில் அரங்கேறியுள்ளன.இலங்கையில் கண்முன்னே நடக்கும் அந்த அரசாங்கத்தின் அட்டுழியங்களை கண்டும் ஒன்றும் செய்ய முடியாத பொம்மைகளாக இருக்கிறார்கள் .. இருக்கிறோம் !

ஜெயலலிதாவை விட ஆட்சியில் இருக்கும் கருணாநிதிக்கே பொறுப்பு அதிகம். ஒகேனக்கல் முதல் ராஜினாமா கடித நாடகம் வரை தமிழனுக்கு மிகப் பெரிய துரோகம் செய்தவராகிவிட்டார் .

இனிமேலும் இந்த இரு கட்சிகளுக்கும் மாறி மாறி வோட்டு போட்டுக் கொண்டிருந்தால் நம்மை விட ஒரு முட்டாள் இருக்கவே முடியாது.

பாரதி சொன்னதுதான் நியாபகத்துக்கு வருகிறது,

" நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால் "