"இலவசங்களை கொடுத்து ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருப்போம் "
முதலாவது கருணாநிதி இன்று அறிக்கையில் சொன்னது .. இரண்டாவது அதற்கு அர்த்தம்.
தேர்தல் நேரங்களில் இந்த மாதிரி ஆளும் கட்சி அறிக்கை விடுவது வாஸ்தவம்தான் என்றாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். இலவசங்கள் கொடுப்பது எங்களை சோம்பேறி ஆக்கும் வேலை என்று உங்கள்ளுக்கு தெரியாதா ? அல்லது எங்களை சோம்பேறி அல்லது பிச்சை காரர்கள் ஆக்குவதுதான் உங்கள் நோக்கமா ?
நாங்கள் படிக்க முடியாமல் இருக்கிறோம் ! அரசின் திட்டங்கள் எங்களை சேரவில்லை ! அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ எங்கள் தெருப்பக்கமே வருவேதில்லை ! அதற்கு ஒரு வழி செய்யுங்கள்
நீங்கள் தேர்தல் அறிக்கை விடுவதற்கு இதோ ஒரு சில ஐடியாக்கள்:
- பொருளாதார நிலைமையில் பின்தங்கியுள்ள குடும்பங்களில் இருந்து ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு பெற உதவி செய்யப்படும் ( உதவி மட்டும் )
- பொருளாதார நிலைமையில் நன்றாக உள்ள SC/ST பிரிவினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க படாது
- அரசு பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிககுக்கு நிகராக உயர்த்தப்படும்.
- அரசியல்வாதிகள் மற்றும் அரசு அலுவலர்களின் குழந்தைகள் ( உங்கள் கொள்ளு பேரன்கள் உட்பட ! ) அரசு பள்ளிகளில் படிக்க உரியவை செய்யப்படும்.
- ஆளும் கட்சியினர் சாலை வழிகளை மறைத்து கட்அவுட் வைப்பது தடை செய்யப்படும்.