Thursday, October 16, 2008

எது சரி

நம்மவர்களில் சிலர் அயல் நாட்டவரின் சுத்தமான சாலை மற்றும் தெருக்களைப் பார்த்து நம் மக்களையே குறை சொல்லக்கூடும்.ஆனால் குறை மக்களிடம் மட்டும் இல்லை என்பதே சரியான வாதம்.

எடுத்துகாட்டாக பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது , சிறுநீர் கழிக்கக் கூடாது , புகை பிடிக்கக் கூடாது என்று சொல்லும் அரசு எச்சில் துப்புமிடம் எங்கு உள்ளது , கழிவறைகள் அருகில் எங்கு உள்ளன அல்லது புகை பிடிக்கும் இடம் எங்கு உள்ளது என்று பேருந்து நிறுத்தங்களில் குறிப்பு வைக்கலாம்.இயற்கை உபாதைகளை இங்கு செய்யக் கூடாது என்று சொல்வதை விட எங்கு செய்யலாம் என்று சொல்வதே சரி.

அதுபோல் சட்டத்தை மீறக்கூடாது என்பதை சொல்லும் அரசு சட்டத்தை பற்றிய தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பள்ளிக் கல்வியுடன் சட்டத்தையும் சிறிது சிறிதாக சொல்லிக்கொடுத்தால் அதை நடைமுறைப் படுத்துவதிலும் ஒரு சிக்கலும் இருக்காது.

Friday, October 3, 2008

கெளரவம்

சட்டைகளில் இருக்கும்

கிழிசல்களை மறைக்க வாங்கினேன்

ஒரு புதிய கோட்.